திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 19 ஜூலை 2021 (10:45 IST)

அடையாறு பூங்கா மீண்டும் தொல்காப்பிய பூங்கா என மாற்றப்பட்டது.

சென்னை அடையாறு பூங்கா மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயர் மாற்றப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. 
 
அடையாறில் உருவாக்கப்பட்ட பூங்காவிற்கு தொல்காப்பிய பூங்கா என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார். 
 
பின்னர் பெயர் பலகை அகற்றப்பட்டு அடையாறு பூங்கா என அழைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் "தொல்காப்பிய பூங்கா" பெயர் பலகை தமிழிலும், ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டுள்ளது.