ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (19:17 IST)

அதிமுக செயற்குழு கூட்டம் அறிவிப்பு - திமுகவிற்கு போட்டியா?

அதிமுகவின் செயற்குழு கூட்டம் வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ளது.
 
திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்துள்ள நிலையில், திமுக செயற்குழு கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. 

 
இந்நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 20ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் செயற்குழு நடைபெற இருக்கிறது. அதேபோல், செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.