ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 மே 2023 (08:40 IST)

காலேஜ் அட்மிஷன் போடணுமா? இதை கவனிங்க! – கலை, அறிவியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்!

Admission
இன்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவும் தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 1,547 அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 143 கல்லூரிகள் மாநில அரசால் நடத்தப்படுகின்றன. இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ரிசல்ட்டுக்கு பிறகு மாணவர்கள் பலர் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் விண்ணப்பிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கலை, அறிவியல் பாட பிரிவுகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று முதல் மே 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. கல்லூரி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தரவரிசை பட்டியல் மே 23ம் தேதிக்குள் தயாரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு மே 30 தொடங்கி ஜூன் 9 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K