1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (09:36 IST)

ரஜினிகாந்த் குடி போதையில் விமான நிலையத்தில் கைது: வெளிப்பட்ட சுயரூபம் (இது கொஞ்சம் பழசு)

ரஜினிகாந்த் குடி போதையில் விமான நிலையத்தில் கைது: வெளிப்பட்ட சுயரூபம் (இது கொஞ்சம் பழசு)

தமிழ் திரையுலகமும் சரி, தமிழக அரசியல் வட்டாரமும் சரி தற்போது ரஜினி குறித்து தான் பேசிக்கொண்டு இருக்கிறது. 9 வருடங்களுக்கு பின்னர் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக கூறிவிட்டு சென்றார்.


 
 
ஆனால் அதனை இன்று வரை சமூக வலைதளங்கள் விவாதித்துக்கொண்டு தான் இருக்கின்றது. சமூக வலைதளங்களில் ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ரசிகர்களுடனான இந்த சந்திப்பின் போது ரஜினி தனது ரசிகர்களுக்கு குடிக்க கூடாது எனவும், புகைப்பிடிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்தார்.
 
இந்நிலையில் கடந்த காலத்தில் நடிகர் ரஜினி விமான நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்து கைது செய்யப்பட்ட செய்தியின் பேப்பர் கட்டிங் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அதில், கடந்த 1979-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் படபிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அன்று இரவு 11 மணியளவில் சென்னை திரும்புவதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த ரஜினி குடிபோதையில் இருந்தார். அப்போது அவர் இந்தியர்கள் எல்லாம் நாய் என திட்டியுள்ளார்.


 
 
சிறிது நேரத்திலேயே அவருடன் வந்திருந்த நண்பருக்கும் அவருக்குமே தகராறு ஏற்பட்டு கலாட்டா செய்யத் தொடங்கிவிட்டார். விமான நிலைய அதிகாரிகள் ரஜினியை சமாதனப்படுத்தினர். ஆனால் ரஜினிகாந்த் அட்டகாசம் அதிகமாகியது.
 
பின்னர் ரஜினிகாந்தை அருகில் இருந்த கண்ணாடி அறைக்கு அழைத்து சென்றனர். ரஜினிகாந்த் அங்கும் ஆத்திரத்துடன் கண்ணாடிகளை எல்லாம் ஆத்திரத்தில் உடைத்தார். இதனால் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த ஐதராபாத் போலீசார் ரஜினியை கைது செய்து பின்னர் அவரது விமான டிக்கெட்டையும் ரத்து செய்தனர்.
 
இந்த சம்பவம் அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. தற்போது அதன் பேப்பர் கட்டிங் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.