நச்சரிக்கும் கைதிகள்: அப்செட்டான அபிராமி; சாப்பிடாமல் தர்ணா போராட்டம்

abi
Last Modified வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (10:24 IST)
கள்ளக்காதல் மோகம் காரணமாக பெத்த பிள்ளைகளை கொலை செய்துவிட்டு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அபிராமியை சக கைதிகள் நச்சரிப்பதாலும், 4 நாட்களாக  சாப்பிடாததாலும் சிறையில் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து போலீஸார் அபிராமி, அவளது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். 
sundar
இந்நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் அபிராமி செம அப்செட்டாம். காமம் என் கண்ணை மறைத்து விட்டது, அநியாயமாக குழந்தைகளை கொன்றுவிட்டேனே என நினைத்து அழுது கொண்டே இருக்கிறாராம். இது ஒருபுறம் இருக்க சக கைதிகளும் அவரை சூழ்ந்து கொண்டு, என்ன ஆனது? என்று கதை கேட்கின்றனராம். ஆனால் அபிராமி அவர்களிடம் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை. 
 
இந்த பிரச்சனைகளின் காரணமாக அபிராமி கடந்த 4 நாட்களாக சாப்பிடாமல், தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறார். இதனால் அவர் நேற்று மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.  தயவு செய்து தன்னை தனிச்சிறையில் அடைக்குமாறு அபிராமி ஜெயிலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இப்போ புலம்பி என்ன பிரஜோஜனம்..


இதில் மேலும் படிக்கவும் :