ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (17:28 IST)

சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்!

job
சென்னையில் நாளை மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதை அடுத்து வேலை இல்லாத இளைஞர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் நாளை அதாவது அக்டோபர் 15-ஆம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காலை 10 மணி முதல் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தகுதியான நபர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இளைஞர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
எனவே நாளை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை இல்லாத இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு வேலை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran