ஜிம் டிரெய்னருடன் உல்லாசம்: வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன்; அரங்கேறிய அவலம்!!!

Last Modified வெள்ளி, 22 மார்ச் 2019 (16:13 IST)
சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் கள்ளக்காதன், கள்ளக்காதலியின் மகளிடம் அத்துமீறியதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
 
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே அந்த பெண்ணிற்கு ஜிம் டிரெய்னர் மணி என்பவனுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. 
 
இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அயோக்கியன் மணி கள்ளக்காதலியின் 16 வயது மகளிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளான். இதனை தனது தாயிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். ஆனால் அவரின் தாய் இதனை கண்டுகொள்ளவில்லை. 
gym
 
இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து திரும்பிய தந்தையிடம் சிறுமி நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனால் பேரதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவனை சிறையில் அடைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :