1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (20:46 IST)

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு: அதிர்ச்சியில் திமுக!

பொதுவாக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் என்றாலே போராட்டக்காரர்கள் காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்படுவதும் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை என்பதும் வழக்கமாக இருந்து வருகிறது 
 
ஆனால் இன்று சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் திமுக நடத்திய குடியுரிமை சட்ட நகலை எரித்து நடத்திய போராட்டம் வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு சீரியஸாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் குடியுரிமை சட்ட நகலை எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 644 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதேபோல் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இன்று போராட்டம் செய்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த வழக்கை அவர் சந்திக்கவே நிலையில் உள்ளார். இதனால் திமுக அதிர்ச்சியில் உள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது