ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:13 IST)

வீட்டு வாசலில் விளையாடிய சிறுவன் பேருந்து மோதி பலி....

விலங்குடி சத்யமூர்த்தி நகரில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் விலங்குடி சத்யமூர்த்தி நகரில் வீட்டு வாசலில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அப்பகுதி வழியே தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பஸ் மோதி சிறுவன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், வீட்டில் வாசலில் விளையாடிய செந்தில்குமாரரின் மகன் பொன்ராம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.