திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (18:11 IST)

தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை

நெல்லையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அயோக்கியன் ஒருவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மேலப்பாளையம் அமுதா நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது வீட்டில் மனைவி மற்றும் 7 வயது மகளுடன்  தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஜஸ்டின் என்ற மனித மிருகம், கருப்பசாமி வீட்டில் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று, சுடுகாட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு ஜஸ்டினை பிடித்து கட்டிவைத்தனர். பின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ஜஸ்டினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.