தமிழக மீனவர்கள் 43 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு


Ashok| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2016 (20:33 IST)
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மாவட்டம் மீனவர்கள் 29 பேரும், ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும் விடுவிக்க திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

 
 
இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி  சிறைபிடிக்கப்பட்ட நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 29 பேரை இலங்கை போலீஸார் இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தமிழக மீனவர்கள் மீது குற்றம் நிரூபிக்க படவில்லை என்பதால் அவர்களை விடுவிக்குமாறு நீதிபதி சரவணராஜா உத்தரவிட்டார். பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைக்கப்பட்டனர்.
 
மேலும், இலங்கை சிறைகளிலுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :