ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (16:14 IST)

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

KN Nehru
தமிழகத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.என் நேரு அறிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்பு வெளியிட்டார். 21 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை, ஆகிய நான்கு நகராட்சிகள் 20 நாட்களுக்குள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
 
தற்போது 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு கூறினார். நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139-ல் இருந்து 159 ஆக உயர்த்தப்படும் என்றும் சென்னையில் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தெருநாய்கள் பிரச்னைகளில் இருந்து மக்களை காக்கும்பணிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் கோவிட் காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றும் அவர் கூறினார். தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதன் மூலம், அதன் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 
சென்னையில் மழைக்காலங்களில் நீர் தேங்க மெட்ரோ ரயில் திட்டப் பணிகளே காரணம் என்று அவர் தெரிவித்தார். சென்னை போன்ற பெருநகரங்களில் மாடுகள் திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு கூறினார்.