ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பா? சென்னை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 3 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தினந்தோறும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளுக்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நேற்று இரவு கொரோனா நோயாளிகள் மூன்று பெயரில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது 
 
நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அறைகளில் உள்ள குழாய்களில் ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக இந்த உயிர் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது ஆனால் தமிழக சுகாதாரத்துறை இதனை முழுமையாக மறுத்துள்ளது.
 
உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே பல்வேறு உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதன் காரணமாகத்தான் அவர் உயிரிழந்ததாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக வெளிவரும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது