3 உயிர்களை காப்பாற்ற பழ.நெடுமாறன் உண்ணாவிரதம்

Webdunia|
பேர‌றிவாள‌ன், சா‌ந்த‌ன், முருக‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் உயிர்கள் காக்கப்பட வேண்டும், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காந்தி பிறந்த நாளான இன்று ம‌க்க‌ள் உ‌ரிமை‌க் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் உ‌ண்ணா‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை கா‌யிதே ‌மி‌ல்ல‌த் க‌ல்லூ‌ரி அரு‌கி‌ல் காலை 9 மணி‌க்கு தொட‌ங்‌கிய உ‌ண்ணா‌விரத‌த்தை ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌‌ர் வைகோ தொட‌ங்‌‌கி வை‌த்தா‌ர்.

மாலை 5 மணி வரை‌க்கு‌‌ம் உ‌ண்ணா‌விரத‌த்‌தை இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் முடித்து வைக்கிறார்.
இதேபோ‌ன்று தமிழகமெங்கும் அனைத்து நகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌‌த்‌தி‌ல் த‌மி‌ழ் ஆ‌ர்வல‌ர்க‌‌ள் உ‌ள்பட ஏராளமானோ‌ர் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :