திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:57 IST)

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை

jail
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக பதிவான வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைதண்டனை  அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக பதிவான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரான்சிஸ் சேவியர் என்பவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து கரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி நசீமாபானு உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.