1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 22 நவம்பர் 2021 (11:17 IST)

ஒரே நாளில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் 10 வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் மொத்தம் 18,21,005 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த ஒன்பது வாரங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அந்த வகையில் நேற்று பத்தாவது தடுப்பூசி மையம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் தொடங்கியுள்ளதாகவும் சென்னையில் மட்டும் 1600 இடங்கள் இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
மேலும் நேற்று நடந்த இந்த தடுப்பூசி முகாம் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனபடி இந்த முகாமில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 71 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் 10 வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் மொத்தம் 18,21,005 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 6,72,580 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 11,48,425 பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். சென்னையில் 1,600 முகாம்களில் 1,27,596 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.