திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (13:01 IST)

14,227 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 100 கோடியே 54 லட்சம் வங்கி கடன் - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்....

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் துவக்கி வைத்தார்.
 
அதன்படி  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில்  நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு  1189 மகளிர் சுய உதவிக் குழவை சார்ந்த 14,227 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 100 கோடியே 54 லட்சம் மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்பு ஆணையை வழங்கினார்.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன்,மாநகராட்சி ஆணையர் சரவணன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், மகளிர் திட்ட இயக்குனர், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மற்றும் மாமன்ற  உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.