வாயில் 450 கிராம் தங்கம் கடத்திய கில்லாடி கைது

Webdunia|
ொழும்புவில் இருந்து சென்னை வந்த ஒருவர் அவரது வாயின் உட்பகுதியில் 450 கிராம் தங்கத்தை அடக்கி வைத்து கடத்த முயன்ற போது போலீசாரால் பிடிபட்டார்.

இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திலிருந்து சென்னை வந்த ஒருவர் தனது வாயின் உட்புறத்தில் 450 கிராம் தங்கத்தை கடத்தி வந்துள்ளார். அப்போது வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள், சந்தேகப்படும்படியாக வந்த அந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் தனது வாயில் வைத்திருந்த 450 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்த முயன்றது தெரியவந்தது.
அந்த நபரை கைது செய்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :