வங்கி ஊழியர் 5 திருநங்கைகளால் அடித்து கொலை

Last Updated: சனி, 29 மார்ச் 2014 (08:22 IST)
மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வங்கி ஊழியர் 5 திருநங்கைகளால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பொன்னேரி-ஆலாடு சாலையில் வசித்து வந்தவர் லிங்கம்(எ)சீனிவாசன்(52). இவர் பழவேற்காட்டில் உள்ள இந்தியன் வங்கியில் வேலை செய்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை இரவு பொன்னேரியில் இருந்து மின்சார ரயிலில் மீஞ்சூர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில் ஏறிய 4திருநங்கைகள் அவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் பணம் கொடுக்காமல் திருநங்கைகளிடம் வாக்கு வாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதையடுத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கிய லிங்கம்(எ) சீனிவாசனை ரயிலில் அவரிடம் வாக்கு வாதம் செய்த திருநங்கைகள் அவரை அடித்து கீழே தள்ளி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. கீழே விழுந்த கிடந்த சீனிவாசனை மீஞ்சூர் காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவர் இறந்து விட்டதாக அங்கிருந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சீனிவாசன் சடலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
வங்கி ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 5திருநங்கைகளை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :