தமிழகத்தை தீவிரவாதிகள் தாக்கத் திட்டம்; புலனாய்வுத்துறை எச்சரிக்கை

Webdunia|
FILE
சுதந்திர தினத்தன்று சென்னை, கோவை, மதுரை ஆகிய தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தீவிரவாத அமைப்புகளிடையே நடந்த உரையாடலின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் கூடும் பகுதிகளான விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும் புலனாய்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் கூடுதலாக பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினம் கொண்டாடப்படும் இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :