செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26

Last Modified சனி, 31 ஆகஸ்ட் 2019 (16:38 IST)
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உழைப்பிற்கும் நேரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பெண்களுக்கு  சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. அரசியல்துறையினர் மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

பரிகாரம்:  அம்மனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்கவும். மனதில் அமைதி ஏற்படும்.


இதில் மேலும் படிக்கவும் :