வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

புதினா இறால் மசாலா

புதினா இறால் மசாலா

தேவையான பொருட்கள்:
 
இறால் - 200 கிராம் 
புதினா - 1 சிறிய கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 2
பூண்டு - 5 பற்கள் 
பச்சை மிளகாய் - 1-2 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 100 மி.லி 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 1 1/2 கப்


 
 
செய்முறை: 
 
இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
 
பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும். 
 
இப்போது சுவையான புதினா இறால் மசாலா தயார்! இதன் சுவை அருமை! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்