வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

அட்டகாசமான சுவையில் இறால் தொக்கு செய்ய....!

இறாலை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர். இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால் தொக்கு எளிமையான முறையில் தயார் செய்யலாம். அதை எவ்வேறு தயார் செய்வது என்பது பற்றிப் பார்போம்.
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
 
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும். அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு ஆகியவற்றை போட்டு  வதக்கவும்.
 
நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் போட்டு வதக்கவும், லேசாக உப்பு தூவி மேலும் வதக்க  எண்ணெய் பிரிந்து வர வேண்டும். இந்த கிரேவியுடன் இறாலை போட்டு வதக்கி இளஞ்சூட்டில் வைக்கவும்.
இறாலை அதிக நேரம் வேக விடக்கூடாது ஏனெனில் சுவை மாறி ரப்பர் போல ஆகிவிடும். மேலே இதன் மூலை கொத்தமல்லி தூவி  இறக்கவும். இறால் வெந்தவுடன் இறக்கி விடவும். இந்த தொக்கினை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.