நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » த‌மிழக‌ம் » கர்நாடகா தங்கள் இஷ்டம் போல் செயல்படக் கூடாது - நாராயணசாமி
FILE
காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படியும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா திறந்துவிடாமல் தங்கள் இஷ்டம் போல் செயல்படுவது சரியல்ல என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சென்னை வந்த நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, வரும் 19ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில், கர்நாடக அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது. தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர். அதற்கான நடவடிக்கை பிரதமர் எடுப்பார்.

தவிர, காவிரி நதி நீர் ஆணைய உத்தரவையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் தங்கள் இஷ்டப்படி செயல்படுவது சரியான செயல் அல்ல என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க
Feedback Print