FREE

On the App Store

FREE

On the App Store

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை - டெசோ மாநாட்டில் தீர்மானம்

திங்கள், 13 ஆகஸ்ட் 2012 (09:14 IST)

Widgets Magazine

ஈழத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாக, மத்திய அரசு அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது நிரந்தரமாக இந்தியாவில் வாழ்பவர் என்ற நிலை வழங்க வேண்டும் எ‌ன்று டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற டெசோ மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் விவரம்:

* ஐ.நா. அவையின் மனித உரிமைக்குழுவின் சார்பில் சர்வதேச குழு ஒன்று அமைக்கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

* ஈழப்பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசின் இத்தகைய கொடுஞ் செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதியாக விளங்கும் ஐ.நா. மன்றம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

* இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

* தமிழீழ பகுதிகளில் இருந்து உடனடியாக ராணுவத்தை சிங்கள அரசு விலக்கி கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அவையும், உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ராணுவத்தை திரும்பப்பெறுவதை நேரடியாக கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும்.

* இலங்கையில் இருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் அகதிகளாக அல்லலுறும் தமிழர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சொந்த நாட்டை விட்டு வெளியேறியதால் பிறநாடுகளில் கைதிகளாக சிறையில் வாடும் ஈழத்தமிழர்களை உடனடியாக, ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையரிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும்.

* ஈழத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாக, மத்திய அரசு அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது நிரந்தரமாக இந்தியாவில் வாழ்பவர் என்ற நிலை வழங்க வேண்டும் என்று இந்த மாநாடு இந்திய அரசை வலியுறுத்துவதுடன், அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஒப்பந்த ஆணை இந்தியாவில் பிற்பற்றப்பட வேண்டும்.

* இலங்கை தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சனையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
|
* இந்திய அரசு, ஈழத்தமிழர் மறுவாழ்வு நிதியாக வழங்கியுள்ள ரூ.500 கோடியை உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

* இலங்கை கடற்படையால் நிராயுத பாணிகளாக இருக்கும் அப்பாவி தமிழக மீனவர்கள் ஈவு இரக்கமின்றி தாக்கப்படுகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர்; சுட்டுக்கொல்லப்படுகின்றனர்; அவர்களது மீன்பிடி படகுகள் மூழ்கடிக்கப்படுகின்றன; அவர்கள் பிடித்த மீன்கள் கைப்பற்றப்படுகின்றன. தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். இந்த கொடுமைக்கொரு முடிவுகட்ட, கச்சத்தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ்கொண்டு வருவதோடு தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்திய கடற்படை தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும்.

* இலங்கை தமிழர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப்பட்ட பயிற்சிகள் அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

* ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக தாய்த்தமிழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டினை சட்டவிரோதமானது என்றும், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இலங்கையில் இருந்து செல்பவர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் இலங்கை அரசின் சார்பில் மிரட்டலாக அறிவித்துள்ளனர். இலங்கை அரசின் இந்த ஜனநாயக எதிர்ப்பு தன்மையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது எ‌ன்பது உ‌ள்பட ப‌ல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பதவி விலகலை அறிவித்தார்!

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ...

சேது சமுத்திரத் திட்டமும் - ராமர் பாலமும்!

தமிழகத்தையும், இலங்கையையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டுக்களை ராமர் கட்டிய ...

கருணாநிதியின் சட்டபேரவை பொன்விழா : ஆளுநர் பாராட்டு!

முதலமைச்சர் கருணாநிதியின் 50 ஆண்டுகள் சட்டப்பேரவை பணியை பாராட்டும் வகையில் தமிழக ...

கங்கை நதியில் பேருந்து விழுந்து 21 பேர் பலியாயினர்!

பாட்னா செல்லும் பயணிகள் பேருந்து ஒன்று கங்கை நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 ...

Widgets Magazine
Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

யேமனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்

யேமனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகத்துக்கு அழைத்துவரும் பணி ...

திருமணத்துக்கு முன்னர் உடலுறவு - கல்லால் அடித்து ஐ.எஸ்.ஐ.எஸ் கொலை

திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காதலர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

’தாஜ்மஹாலை இந்துக்களின் கையில் ஒப்படைக்க முடியாது’ - ஆக்ரா நீதிமன்றம் தள்ளுபடி

தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னாள் சிவன் கோயில் இருந்தது. அதனால் அதனை இந்துகளிடம் ஒப்படைக்க ...

தமிழக பட்ஜெட் 2015-2016 முழுவிவரம்

2015-2016 ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் ...

Widgets Magazine
Widgets Magazine