கேரளாவிற்கு கடத்திய ஒன்றரை டன் வெடிபொருட்கள் பறிமுதல்
வியாழன், 21 ஜூன் 2012( 15:39 IST )
கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் கேரளாவிற்கு அரிசி கடத்தி செல்வதை தடுப்பதற்காக வட்டவழங்கல் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்திவருகின்றனர்.
இன்றும் வழக்கம்போல் இளவன்கோடு தாலுகா வட்ட வழங்கல் அஹிகாரி சுஜித் பிரமிளா தலைமையில் அதிகாரிகள் சாமியார் மடம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது.
அதை நிறுத்துமாறு கூறியும் நிற்க வில்லை உடன் அதிகாரிகள் அந்த காரை பின்தொடர்ந்தனர்.
சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சென்ற பின்னர் கேரள மாநில எல்லைக்கு சற்று தூரத்தில் செரியகொல்லா என்ற சோதனை சாவடியின் தடுப்பு சுவரில் கார் மோதியது. பின்னாடியே வந்த அதிகாரிகள் அந்த காரில் உள்ள டிரைவரை கைது செய்தனர்.
காரில் சோதனை நடத்தியதில் காரில் ஒன்றரை டன் வெடி பொருட்கள் அமோனியம் நைட்ரேட் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இது நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்தது. இது குறித்து விசாரணை நடத்தபட்டு வருகிறது.