3-‌ம் தேதி முதல் அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்

புதன், 29 பிப்ரவரி 2012 (15:10 IST)

மெட்ரோ ரயில் பணிகளுக்காக செ‌ன்னை அண்ணாசாலையில் வரு‌ம் 3-‌ம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படு‌கிறது.

இது குறித்து சென்னை போக்குவரத்து போலீ‌ஸ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி மற்றும் ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் சுரங்க இரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் சீராக செல்ல ஏதுவாக 3.3.2012 அன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

அதன்படி, ஒரு வழிபாதையாக மாற்றப்படும் சாலைகள் விவரம்:

* அண்ணா சாலையில் திரு.வி.கா.சாலை சந்திப்பு முதல் வெல்லிங்டன் சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. இந்த சாலையில் ''ஓயிட்ஸ்'' ரோடு சந்திப்பிலிருந்து எல்.ஐ.சி. நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். வெல்லிங்டன் சந்திப்பிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வாகனங்கள் செல்ல தடைசெய்யப்படுகிறது.

* தற்போது (ஜெனரல் பீட்டர்ஸ்) ஜி.பி. சாலையில் நடைமுறையில் உள்ள ஒருவழி பாதை மாற்றியமைக்கப்பட்டு வெல்லிங்டன் சந்திப்பிலிருந்து வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி செல்ல தடைசெய்யப்படுகிறது.

* ஓயிட்ஸ் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. இந்த சாலையில் ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டும். அண்ணாசாலையிலிருந்து வாகனங்கள் வர தடைசெய்யப்படுகிறது.

* பட்டுல்லாஸ் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. இச்சாலையில் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஓயிட்ஸ் சாலையிலிருந்து வாகனங்கள் வர தடை செய்யப்படுகிறது.

* ஸ்மித் ரோடு ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. இந்த சாலையில் ஓயிட்ஸ் ரோடு சந்திப்பிலிருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். அண்ணா சாலையிலிருந்து வாகனங்கள் வர தடை செய்யப்படுகிறது.

* அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

* அண்ணா சிலையிலிருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் வெல்லிங்டன் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு ஜி.பி. ரோடு - ஓயிட்ஸ் ரோடு வழியாக அண்ணா சாலையை வந்தடையலாம்.

* அண்ணா சிலையிலிருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பில் திருப்பப்பட்டு ஜி.பி. ரோடு - ஓயிட்ஸ் ரோடு - ஸ்மித் ரோடு - அண்ணா சாலை வழியாக பின்னி சாலையை வந்தடையலாம்.

* பாரதி சாலையிலிருந்து (ஜாம்பஜார்) அண்ணா சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஓயிட்ஸ் ரோடு - ஸ்மித் ரோடு வழியாக அண்ணா சாலையை வந்தடையலாம்.

* ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து (வெஸ்ட்காட் ரோடு) அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே கட்டாயமாக இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு - ஸ்மித் ரோடு வழியாக அண்ணா சாலையை வந்தடையலாம்.

* பின்னி சாலையிலிருந்து சத்யம் திரையரங்கு அல்லது ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை - ஓயிட்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

* பின்னி சாலையிலிருந்து பாரதி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை அல்லது ராயப்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் உட்ஸ் ரோடு ஜி.பி. ரோடு - ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

* கிரீம்ஸ் சாலையிலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் திரு.வி.க சாலை - ஓயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை சென்றடையலாம்.

வாகன ஓட்டுநர்கள் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தில் திருத்தங்கள் தேவைப்பட்டால் சில நாட்கள் பயன்படுத்திய பிறகு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எ‌‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

செய்திகள்

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் : பேச்சுவார்த்தையில் மேலும் முன்னேற்றம்!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தத்தை உருவாக்க இந்திய, ...

ரூபாயின் பணவீக்கம் 5.22 விழுக்காடாக குறைந்தது!

உணவுப் பொருட்கள், ஜவுளி ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் வாங்கும் சக்தி மே 12 ஆம் ...

ஹைதராபாத் குண்டுவெடிப்பு : மராட்டியத்தில் ஒருவர் கைது!

ஹைதராபாத்தில் சார்மினார் அருகில் உள்ள பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் மசூதியில் நடந்த குண்டு ...

2010ல் அகண்ட வரிசை பயன்படுத்துவோர் 2 கோடியாக உயரும்!

நமது நாட்டில் அகண்ட அலைவரிசையை பயன்படுத்தி இணையத்தை இயக்குவோர் எண்ணிக்கை 2010 ஆம் ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் புதிய மருந்து

மனிதர்களை அச்சுறுத்தும் புற்றுநோய் கிருமிகளை, எதிர்த்து அழிக்கும் நுண்துகள்களை அமெரிக்காவில் உள்ள ...

வான்வெளியில் பூமியை போன்ற மற்றொரு கோள் கண்டுபிடிப்பு

வான்வெளியில் பூமியைப் போன்றே தோற்றமளிக்கும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

ஆதாரமில்லாமல் அவிழ்த்து விடும் அரைவேக்காடு அரசியல்

நாடாளுமன்றத்தில் தனது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் எழுந்து சென்ற ராஜீவ் காந்தியை, "மிஸ்டர். ...

நமோ நமோ பஜனை பாடும் கேப்டனும் அன்புமணியும்!

கூட்டணி என்று வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்கள், கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்து பொதுக் ...

Widgets Magazine