மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.
சினிமாவிற்கு 10.3 சதவீத சேவை வரியை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து மாநில சினிமாத் துறையினரும் இணைந்து இன்று ஒருநாள் மட்டும் தியேட்டர்களை மூடி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 1400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. படப்பிடிப்புகள் நடை பெறாததால் ஸ்டூடியோக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
வடபழனியில் அனைத்து ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. திரையுலகம் சம்பந்தமான டப்பிங், மிக்சிங், ரீக்கார்டிங் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்ப பணிகளும் நடைபெறவில்லை.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி, வினியோகஸ்தர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் போன்ற அனைத்து சங்கங்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.