நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | லோ‌க்பா‌ல்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » த‌மிழக‌ம் » யானைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு
நடப்பு ஆண்டில் ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் யானைகளின் இறப்பு அதிகரித்துள்ளது.

ஈரோடு மண்டலத்திற்குட்பட்டது அந்தியூர், பர்கூர் உள்ளிட்ட வனப்பகுதி. இதேபோல் சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு ஐந்து ரேஞ்சுகள் உள்ளது. இந்த வனப்பகுதியில் யானைகள் அதிகமாக வசித்து வருகின்றன. இந்த யானைகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் நடத்தும் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் யானைகள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்படி யானைகளின் எண்ணிகை அதிகம் உள்ள வனப்பகுதி ஈரோடு மண்டலம் என பெருமையாக கூறலாம். அதே சமயம் கடந்த ஆண்டு யானைகள் அதிகமாக இறந்ததும் ஈரோடு மண்டலத்தில் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

கடந்த ஒரு வருடத்தில் ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் பஸ்ஸில் அடிபட்டு, யானைகளுடன் சண்டையிட்டு, நோய்வாய்பட்டு மற்றும் விவசாய தோட்டத்தில் வைத்த மின்கம்பியில் பட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

இதில் மின்சாரம் தாக்கி இறக்கும் யானைகளையும், வாகனம் மோதி இறக்கும் யானைகளையும் கட்டாயம் கட்டுப்படுத்த முடியும் இதை வனத்துறையினர் கட்டுப்படுத்தினாலே ஈரோடு மண்டலத்தில் யானைகளின் இறப்பு சதவீகித்தை குறைக்க முடியும்.
மேலும் படிக்க
WebduniaWebdunia