தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » ம‌த்‌‌திய ‌சிறை‌யிரு‌ந்த இட‌த்த‌ி‌ல் மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி: கருணா‌நி‌தி (New building of Madras Medical College at the old Central Jail premises)
Bookmark and Share Feedback Print
 
ம‌‌த்‌திய ‌சிறை இரு‌ந்த இட‌த்த‌ி‌ல் செ‌ன்னை அரசு மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி‌க்கு ரூ.70 கோடியில் செல‌வி‌ல் பு‌திய க‌ட்டிட‌ம் க‌ட்ட‌ப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்னை மாநகரின் மையப்பகுதியிலிருந்த மத்திய சிறையைப் புழல் பகுதிக்கு மாற்றியதால் ஏற்பட்ட 13.28 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை அரசு பொது மருத்துவமனையின் விரிவாக்கத்திற்காக முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்து ஆணையிட்டிருந்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனை 175 ஆண்டு கால பாரம்பரியம்மிக்கது. இம்மருத்துவமனை இந்த ஆண்டு 175-ம் ஆண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. 2722 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையுடன் இணைந்து சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரம் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனை 30 ஏக்கர் நிலத்தில் உள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து உலகப்புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரி பழைய கட்டிடங்களிலேயே இதுவரையில் இயங்கி வருகின்றது.

எனவே தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட பத்து ஏக்கர் நிலத்தில், தற்போதுள்ள சென்னை அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் 100 ஆண்டுகள் பழமையானது என்பதாலும், பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து செல்வதில் ஏற்படும் இடர்பாடுகளை‌க் களையும் விதத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரிக்காக புதிய அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டலாம் என முதலமைச்சர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

அந்த புதிய கட்டடம் 41,934சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.70கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் மருத்துவ பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, உயர் சிறப்பு மேற்படிப்பு, செவிலியர் படிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த எட்டு மாடிகள் கொண்ட ஒரே கட்டடத்தில் படிப்பார்கள்.

சென்னை மருத்துவ கல்லூரிக்காக உருவாக இருக்கும் புதிய கட்டிடம் நவீன வசதிகளுடனும், மாதிரி மருத்துவக்கல்லூரியாகவும் விளங்கும் வகையில் உலகத் தரம்மிக்கதாக கட்டப்படும். இந்த புதிய எட்டு மாடி கட்டிடத்தில் முதல் நான்கு மாடிகள் அனைத்து மருத்துவக்கல்லூரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். ஐந்தாவது மாடியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பு மாணவர்களுக்கான விரிவுரை கூடமாக இருக்கும். ஆறாவது மாடி கட்டடம் மருத்துவம் சார்ந்த படிப்பு மாணவர்களுக்கும், ஏழாவது மாடியில் செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கும், எட்டாவது மாடி எல்லா மாணவர்களுக்குமாக தேர்வுகள் நடைபெறும் அரங்கமாக இருக்கும்.

தற்போது உள்ள மருத்துவ கல்லூரி கட்டிடங்கள், சென்னை அரசு மருத்துவமனை விரிவாக்க‌த்திற்கு பயன்படுத்தப்படும். கட்டிடத்தின் ஒரு பகுதியில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் புராதன ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும். மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் டிசம்பர் மூன்றாவது வாரத்திற்குள் கோரப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்