தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
|
தமிழகச் செய்திகள்
|
நாடும் நடப்பும்
|
சுற்றுச்சூழல்
|
வாசகர் பக்கம்
|
நேர்முகம்
|
நிதிநிலை
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகச் செய்திகள்
»
கூட்டங்கள் நடத்தத் தடையா? பழ.நெடுமாறன் கண்டனம்
Feedback
Print
கூட்டங்கள் நடத்தத் தடையா? பழ.நெடுமாறன் கண்டனம்
சென்னை, புதன், 25 நவம்பர் 2009( 14:08 IST )
ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழகமெங்கும் ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துவதற்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும், உலக நாடுகளிலும் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துவதற்குக் காவல்துறை பல இடங்களில் அனுமதித் தர மறுத்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.
மேலும் இந்நிகழ்ச்சி குறித்து சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றை அச்சிடக் கூடாதென அச்சகங்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளன. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜனநாயக உரிமைகளை பறிப்பதோடு மட்டுமல்ல, சகோதரத் தமிழர்களுக்காக நினைவு கூட்டங்கள் நடத்துவதையும் அனுமதிக்க மறுப்பது அப்பட்டமான தமிழ் விரோதப் போக்காகும்.
அன்று நினைவு கூட்டங்களை மண்டபங்களிலாவது அல்லது வீடுகளிலாவது அவசியம் நடத்துமாறும் அன்றிரவு தமிழர் வீடுகளில் தியாகத் தீபங்கள் ஏற்றி மறைந்தவர்களின் நினைவைப் போற்றுமாறும் அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.
அத்துடன் இலங்கை இனவெறி அரசு முப்படை கொண்டு நடத்திய மூர்க்கத்தனமான போரில் குண்டடிபட்டு காயமடைந்து, உடல் உறுப்புகளையும், குடியிருப்புகளையும் இழந்து, இன்றும் சித்திரவதைக் கூடங்களில் அளவிட முடியாத கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கைத் தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் உறுதி ஏற்க வேண்டுகிறோம் என்று பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
கூட்டங்கள்,
தடை,
பழநெடுமாறன்,
கண்டனம் இலங்கைத் தமிழர்
மேலும்
• தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
• சென்னை சுற்றுலா நட்பு ஆட்டோ வாகன ஓட்டுநர்களுக்கு அனுமதி
• சங்கரராமன் கொலை வழக்கு டிசம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
• பள்ளி வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றினால் உரிமம் ரத்து: தமிழக அரசு எச்சரிக்கை
• தெற்கு இரயில்வே பொதுமேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் திடீர் மாற்றம்
• புதுச்சேரியில் காவலரை தாக்கிய ரவுடி கைது