தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » நடிகர் குணால் கொலை வழக்கில் இந்தி நடிகை கைது
Bookmark and Share Feedback Print
 
நடிகர் குணால் கொலை வழக்கில் இந்தி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு‌ள்ளா‌ர்.

காதலர் தினம், புன்னகைதேசம், பார்வை ஒன்றே போதுமே' உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் குணால் (30). மேலும் போஜ்புரி மொழிப் படங்கள் சிலவற்றிலும், ஒரு இந்தி படத்திலும் நடித்து இருக்கிறார்.

மும்பையில் ஓஷிவாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தி‌ல் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்த குணால், கடந்த ஆண்டு பிப்ரவரி 7ஆ‌ம் தேதி மர்மமான முறையில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

அவரது மனைவி அனுராதா (28), தனது 2 குழந்தைகளுடன் அகமது நகரில் வசிக்கும் பெற்றோரை பார்க்க சென்றிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது.

இது குறித்து வெர்சோவா காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்தனர். முதலில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

எனினும் குணாலின் தந்தையும், இராணுவ அதிகாரியுமான ராஜேந்திரா, மும்பை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடுத்தார். அதில், தனது மகன் தற்கொலை செய்யவில்லை. மரு‌த்துவமனை‌யில் என் மகன் உடல் ஒப்படைக்கப்பட்டபோது, கை, நெஞ்சுப் பகுதியில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

எனவே அவனை யாரோ கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டது போல நம்பவைப்பதற்காக உடலை மின்விசிறியில் தொங்கவிட்டுச் சென்று இருக்கிறார்கள். எனவே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த ‌நீ‌திம‌ன்ற‌ம், நடிக‌ர் குணால் மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்‌ட் மாத‌ம் காவ‌ல்துறைக்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து குணால் மரணம் குறித்து மும்பை வெர்சோவா காவ‌ல்துறை‌யின‌ர் மீண்டும் விசாரணை நடத்தினர். பின்னர் கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் குணால் கொலை தொடர்பாக, அவரது நெருங்கிய தோழியும், இந்தி நடிகையுமான லவீனா பாட்டியாவை கடந்த கட‌ந்த 22ஆ‌ம் தே‌தி காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து‌ள்ளனர்.

இ‌ந்த தகவலை வெர்சோவா காவ‌ல்‌துணை ஆ‌‌‌ய்வாள‌ர் கே.கடேகார் தெரிவித்து‌ள்ளா‌ர். குணால் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சமயத்தில், நடிகை லவீனா பாட்டியா அங்கு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்