சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் என்மீது இப்போது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புலன் விசாரணை முடிந்து ஒரு ஆண்டுக்கு பிறகு என் மீது வழக்கு நடக்கிறது. நானும், கண்ணப்பனும் அன்று பேசியது குறித்து அப்போதே நீதிமன்றம் எங்களை சிறையில் இருந்து விடுவித்தது.
இப்போது அவர் தி.மு.க. வில் சேர்ந்து விட்டார். அப்போது கண்ணப்பன் பேசியது கூட தவறு இல்லை. கண்ணப்பனையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று இப்போது நான் கூறவில்லை.
பழிவாங்கும் நடவடிக்கைக்கு இது ஒரு உதாரணம். நான் வழக்கை கண்டு அஞ்சவில்லை. எதிர் கொள்வேன். ம.தி.மு.க. தேசிய ஒருமைப்பாட்டை ஏற்று கொண்ட கட்சி. தனி தமிழ்நாடு எங்கள் எண்ணம் கிடையாது.
இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை அழைத்து பேசினார். திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இதனால் அ.தி.மு.க. வெற்றிக்கு நாங்கள் பாடுபடும் என்று வைகோ கூறினார்.