தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பலத்த மழை
சென்னை, சனி, 21 நவம்பர் 2009( 12:44 IST )
தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாவட்டங்களிலும் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று வரை மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து கனமழை பெய்ததால் தூத்துக்குடி, நெல்லை கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.