மாமல்லபுரம் வந்த முதலமைச்சர் கருணாநிதி அங்குள்ள உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்துள்ளார்.
இன்று காலை 6.45 மணியளவில் மாமல்லபுரத்திற்கு சென்ற முதலமைச்சர் கருணாநிதியுடன் அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார்.
முதல்வர் தங்கியுள்ள விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் சிலர் முதல்வரை சந்தித்தனர். அப்போது முதல்வர் அவர்களிடம் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அவர் ஓய்வெடுக்க வந்ததாக கூறப்பட்ட போதிலும், "பெண்சிங்கம்', "பொன்னர் சங்கர்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதுவதற்கு வந்ததாக கூறப்படுகிறது.