தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » சாகச ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌க்கு அனும‌தி அ‌ளி‌க்க கூடாது: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்
Feedback Print Bookmark and Share
 
சாகச‌ம் எ‌ன்ற பெய‌ரி‌‌ல் ச‌ட்ட‌த்தை ‌மீறு‌ம் வகை‌யி‌‌ல் மாணவ‌ர்களை ஊ‌க்க‌ப்படு‌த்த‌க் கூடாது எ‌ன்று‌ம் இது தொட‌ர்பாக ப‌ள்‌ளி‌க் க‌ல்‌வி‌த்துறை உ‌ரிய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னையை சே‌ர்‌ந்‌த வழ‌க்க‌‌றிஞ‌ர் ‌வி‌ஸ்வநாத‌ன் எ‌ன்பவ‌ர் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தா‌க்க‌‌ல் செ‌ய்து‌ள்ள பொதுநல மனு‌வி‌ல், வ‌த்தலகு‌ண்டி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் மெ‌ட்‌ரிகுலேஷ‌ன் ப‌ள்‌ளி‌‌யி‌ல் 8ஆ‌ம் வகு‌ப்பு படி‌க்கு‌ம் மாணவ‌‌ன் அ‌ண்மை‌யி‌ல் வ‌த்தலகு‌ண்டி‌ல் இரு‌ந்து ‌தி‌ண்டு‌க்க‌ல் வரை ‌ஸ்கா‌ர்‌பியோ காரை ஓ‌ட்டி‌ச் செ‌ன்று சாதனை படை‌த்ததாக செ‌ய்‌தி வெ‌ளி‌வ‌‌ந்து‌ள்ளது.

மோ‌ட்டா‌‌ர் வாகன ச‌ட்ட‌த்த‌ி‌ன்படி 18 வயது பூ‌ர்‌த்‌தியடை‌‌ந்தவ‌ர்க‌ள் தா‌ன் வாகன‌ங்களை ஓ‌ட்ட முடியு‌ம். அ‌ப்படி‌யிரு‌க்கை‌யி‌ல் ப‌ள்‌ளி மாணவ‌ன் வாகன‌த்தை ஓ‌ட்டி செ‌ன்றது ‌வி‌தி‌மீ‌றிய செய‌ல். ஆனா‌ல் மாணவ‌ர்களை ஊ‌க்க‌ப்படு‌த்துவத‌ாக கூ‌றி ப‌ள்‌ளி ‌நி‌ர்வாக‌ம் இத‌ற்கு அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது. இதுபோ‌ன்ற ‌நிக‌ழ்வுக‌ள் ப‌ள்‌ளிக‌ளி‌ல் நடைபெறாம‌ல் தடு‌க்க ப‌ள்‌ளி‌க் க‌ல்‌வி‌த்துறை‌க்கு அரசை உ‌த்தர‌விட செ‌ய்ய வே‌ண்டு‌ம்'' எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனு தலைமை ‌‌நீ‌தி‌ப‌தி எ‌ச்.எ‌ல்.கோகலே, ‌நீ‌திப‌தி பா‌ல் வச‌ந்தகுமா‌ர் ஆ‌கியோ‌ர் மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, சாகச‌ம் எ‌ன்ற பெய‌ரி‌ல் ச‌ட்ட‌த்தை ‌மீறு‌ம் வகை‌யி‌ல் மாணவ‌ர்களை ஊ‌க்க‌ப்படு‌‌த்து‌ம் எ‌‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு‌ம் அனும‌தி அள‌ி‌க்க‌க் கூடாது.

இதை தடு‌க்க ப‌ள்‌ளி‌க் க‌ல்‌வி‌த்துறை தகு‌ந்த உ‌த்தரவை ‌பிற‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம். தேவை‌‌ப்ப‌ட்டா‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ப‌ள்‌ளி ‌மீது நடவடி‌க்கை எடு‌க்கலா‌ம். மேலு‌ம் ந‌ீ‌திம‌ன்ற கவன‌த்தை ஈ‌ர்‌த்த வழ‌க்க‌றிஞ‌ரு‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் பாரா‌ட்டு தெ‌ரி‌வித‌்து கொ‌ள்‌கிறது எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்