தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
|
தமிழகச் செய்திகள்
|
நாடும் நடப்பும்
|
சுற்றுச்சூழல்
|
வாசகர் பக்கம்
|
நேர்முகம்
|
நிதிநிலை
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகச் செய்திகள்
»
கூடலூரில் 9ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Feedback
Print
கூடலூரில் 9ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை, சனி, 7 நவம்பர் 2009( 13:39 IST )
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், உதக மண்டலம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் நிலங்களை எந்தவித கட்டுப்பாடுமின்றி உடனடியாக விற்க தி.மு.க. அரசு வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் போக்குவரத்து வசதிகளில் கட்டுப்பாடு ஏற்படுத்தி இருப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இச்செயலுக்கு காரணமான தி.மு.க. அரசை கண்டிக்கும் விதத்தில் நீலகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் செம்மலை தலைமையில் நடைபெறும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் ஜெயலலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
கூடலூர்,
அஇஅதிமுக ஆர்ப்பாட்டம்
மேலும்
• சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்புகிறது
• சென்னையில் நான்கு நாளில் 250 மி.மீ. மழை!
• தென் மாவட்டங்களில் நிரம்பி வரும் அணைகள்
• சத்தியமங்கலத்தில் வாழை வரத்து அதிகரிப்பு
• வளர்ந்த மரங்களை வெட்டும் கும்பல்: தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் தவிப்பு
• ஈரோடு மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்களை திருடும் கும்பல்