சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்புகிறது
சென்னை, சனி, 7 நவம்பர் 2009( 13:19 IST )
சென்னை, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு மற்ற ஏரிகளைவிட அதிகமாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த 4ஆம் தேதி 300 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று அது 1,620 கனஅடி ஆனது. இன்று 1,377 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று முன்தினம் செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு 584 மில்லியன் கனஅடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 864 மில்லியன் கனஅடி ஆக இருக்கிறது. கடந்த வருடம் இதேநாள் 1,938 மில்லியன் கன அடிதண்ணீர் இருந்தது. இன்றைய நீர்மட்டம் 10.70அடி மொத்தம் உயரம் 24அடி மழைஅளவு 80 மில்லி மீட்டர்.
புழல் ஏரியில் 1,133 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த வருடம் இதேநாளில் 1,685 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. இன்று காலை ஏரிக்கு 301 கனஅடி தண்ணீர் வருகிறது. இதன் மொத்த உயரம் 21.20அடி இன்றைய நீர்மட்டம் 9.05அடி. மழை அளவு 11.மி.மீ.
பூண்டி ஏரிக்கு 526 கன அடி தண்ணீர் வருகிறது. 1,178 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த வருடம் இதேநாளில் 2,121 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. 35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் இன்றைய நீர்மட்டம் 27.21அடி மழை அளவு 15 மி.மீ.
வீராணம் ஏரியின் மொத்த உயரம் 15.60 அடி. இன்றைய நீர்மட்டம் 11.80அடி நீர்வரத்து 600 கன அடி. மழை அளவு 55மி.மீ தண்ணீர் இருப்பு 623 மில்லியன் கனஅடி கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 441 மில்லியன் கன அடி.