சென்னை நகரில் கடந்த 4 நாளில் 250 மிமீ மழை பெய்துள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இந்த ஆண்டு 600 மி.மீ. அளவுக்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஆனால், கடந்த 4 நாட்களிலேயே 250 மி.மீ. மழை சென்னையில் பெய்துள்ளது என்றும் சில தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேங்கி நிற்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆண்டிலும், கடந்த ஆண்டிலும் மழைநீர் வடிகால்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டதாலும், வடிகால்வாய்களில் தூர் வாரும் பணி 90 சதவீதம் முடிக்கப்பட்டதாலும் மழைநீர் தேங்கும் பிரச்சனை பெரிதாக இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.