தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » சத்தியம‌ங்கல‌த்‌தில் வாழை வரத்து அதிகரிப்பு
Feedback Print Bookmark and Share
 
webdunia photo
WD
சத்தியமங்கலத்தில் நேற்று பத்தாயிரம் வாழை தார்கள் ஏலம் மூலம் விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக வாழை ஏலம் நடந்தது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் வாழை தார் ஏலம் நடக்கிறது.

நேற்று நடந்த ஏலத்தில் சத்தியமங்கலம் சுற்றுப்புறங்களில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து பத்தாயிரம் தார்களுக்கு மேல் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ஏலத்தில் நேந்திரம் கிலோ ரூ.23 க்கும், கதளி கிலோ ஒன்று ரூ.21 க்கும், தேன் வாழை தார் ஒன்று ரூ.300 க்கும், செவ்வாழை தார் ஒன்று ரூ.450 வரைக்கும் விற்பனையானது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்