வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதின் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளதாலும் குமரி கடலில் மற்றொரு தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாலும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் கனத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.