தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » பவானிசாகர் அகதிகளிடம் அமைச்சர் சாமிநாதன் குறைகேட்பு
Feedback Print Bookmark and Share
 
பவானிசாக‌ரி‌ல் உ‌ள்ள இலங்கை அகதிகள் முகாமில் நெடுஞ்சாலை‌த்துறை அமைச்சர் வெ‌ள்ள‌க்கோ‌வி‌ல் சா‌மிநா‌த‌ன் ுறைகளை கே‌ட்ட‌றி‌ந்தா‌ர்.

webdunia photo
WD
முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி த‌மிழக‌த்த‌ி‌ல் உ‌ள்ள அகதிக‌ளி‌ல் அடி‌ப்படை வ‌ச‌திகளை மே‌ம்படு‌த்த ரூ.12 கோடி நிதி ஒதுக்கியுள்ளா‌ர். இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 863 குடும்பத்தை சேர்ந்த 2068 ஆண்கள் உட்பட 3965 பேரிடம் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வ‌ெ‌ள்ள‌க்கோ‌வி‌ல் சாமிநாதன் குறைகளை கே‌ட்ட‌றி‌ந்தா‌ர். அமை‌ச்சருட‌ன் ஈரோடு டி.ஆர்.ஓ. மாயகிருஷ்ணன், கோபி ஆர்.டி.ஓ. மகேஸ்வரன், சத்தியமங்கலம் தாசில்தார் சிவசுந்தரம் ஆகியோர் செ‌ன்றன‌ர்.

நேரில் வந்து குறைகேட்ட அமை‌ச்ச‌ரிட‌ம் முகாமை சேர்ந்த ஆண்கள், பெண்கள் தங்கள் குறைகளை போட்டிபோட்டு கூறினர். தங்கள் குழந்தைகளுக்கு படிக்க நேசனல் வங்கிகளில் கடனுதவி வழங்கவேண்டும், வீடு, கழிப்பிடம் மற்றும் மின்சார இணைப்புகள் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் அகதிகள் முகாமை சேர்ந்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கூறினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமை‌ச்ச‌ர் சா‌மிநாத‌‌ன் கூறினா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்