கருணாநிதியுடன் உலக வங்கி இயக்குநர் சந்திப்பு
சென்னை, வியாழன், 5 நவம்பர் 2009( 14:10 IST )
தமிழக முதலமைச்சர் கருணாநிதியை உலக வங்கியின் இந்தியாவிற்கான இயக்குநர் ராபர்டோ ஜகா, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த இந்த சந்திப்பின்போது நிதியமைச்சர் அன்பழகன், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக வங்கியின் இந்தியாவிற்கான ஆலோசகர் ரஷீத்பென்மசூத் ஆகியோர் உடனிருந்தனர்.