தஞ்சை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தஞ்சாவூர், வியாழன், 5 நவம்பர் 2009( 11:15 IST )
பலத்த மழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் தொடர்மழை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மழை நீடிப்பதால் கடலூர் மாவட்டத்தில் இன்று அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.