தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » கோத்தபயவைக் காப்பாற்ற இந்தியா உதவக் கூடாது: பழ. நெடுமாறன் எதிர்ப்பு (India should not protect Gothabaya and Sarath fonseka- says Nedumaran)
Feedback Print Bookmark and Share
 
இலங்கையில் சிறிலங்க அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப் படுகொலைப் போரில் இழைத்த குற்றங்களுக்காக கோத்தபய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை அமெரிக்கா அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபடக் கூடாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரில் இழைத்த போர்க் குற்றங்களுக்காக சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழர்களின் எதிர்ப்பிற்கு ஆளாவீர்!

அமெரிக்கா நடத்திவரும் இந்த விசாரணையை தடுத்து நிறுத்திடவும், தனது சகோதரரைக் காத்திடவும் சிறிலங்க அதிபர் ராஜபக்ச இந்தியாவின் உதவியை நாடியுள்ளார் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள பழ. நெடுமாறன், இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் டெல்லிக்கு வந்து பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

“ஒரு இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல, மனித நேயமற்ற செயலுமாகும். ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டது, இப்போதும் அதைப்போல செயல்படுமானால் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பிற்கும் ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறேன்” என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்