பிளஸ் 2 படித்த பெண்களுக்கு நோக்கியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னை, செவ்வாய், 3 நவம்பர் 2009( 12:52 IST )
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊதியம் ரூ.4400 மற்றும் இலவச உணவுடன் ஆயிரம் ரூபாய்க்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும்.
பிளஸ் 2இல் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும். ஆகையால், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.