தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » வாழைக்கு வினோத நோய்: மது கலந்து மருந்து தெளிக்கும் விவசாயிகள்
Feedback Print Bookmark and Share
 
webdunia photo
WD
ஈரோடு மாவட்டத்தில் வாழை பயிருக்கு ஏற்பட்டுள்ள வினோத நோயை போக்க விவசாயிகள் மது கலந்த பூச்சி மருந்தை தெளித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டமாகும. இங்கு வசிக்கும் விவசாயிகள் தற்போது வாழை அதிகளவில் பயிர் செய்துள்ளனர்.

தற்போது இந்த வாழை அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த வாழைக்கு ‌ிடீரென சருகுநோய் போன்ற ஒரு வினோத நோய் தாக்கியுள்ளது.

webdunia photo
WD
இந்த நோயினால் வாழை காய் சிறுத்து காணப்படுகிறது. இந்த நோயில் இருந்து தங்கள் வாழை பயிரை காப்பாற்ற தற்போது விவசாயிகள் பூச்சி மருந்தோடு பிராந்தி மதுவகையையும் கலந்து தெளித்து வருகின்றனர்.

இது கேட்பதற்கும் பார்பதற்கும் வித்தியாசமாக இருந்தாலும் மதுவை கலந்து மருந்து தெளிப்பதால் வாழைக்கு ஏற்பட்டுள்ள இந்த வினோத நோய் கட்டுப்படுவதாக வாழை விவசாயிகள் கூறுகின்றனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்