தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
|
தமிழகச் செய்திகள்
|
நாடும் நடப்பும்
|
சுற்றுச்சூழல்
|
வாசகர் பக்கம்
|
நேர்முகம்
|
நிதிநிலை
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகச் செய்திகள்
»
திருமணமான 2 வது நாளில் கடலில் குதித்து தற்கொலை செய்த இந்திய ரிசர்வ் படை வீரர் மனைவி
(Newly-wed woman commits suicide day after marriage)
Feedback
Print
திருமணமான 2 வது நாளில் கடலில் குதித்து தற்கொலை செய்த இந்திய ரிசர்வ் படை வீரர் மனைவி
புதுச்சேரி, திங்கள், 2 நவம்பர் 2009( 15:47 IST )
திருமணமான 2 வது நாளில் இந்திய ரிசர்வ் படை வீரர் மனைவி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சோக நிகழ்வு புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரி சின்னகாலால்பட்டை சேர்ந்தவர் தரகேஸ்வரி (25). இவருக்கும் மஞ்சகுப்பத்தைத் சேர்ந்த பக்ரூதீன் (27) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. பக்ரூதீன் இந்திய ரிசர்வ் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலையில் படுக்கை அறையில் மனைவியை தேடியுள்ளார் பக்ரூதீன். பின்னர் உறவினர் வீடுகளிலும் மனைவியை பக்ரூதீன் தேடியுள்ளார். எங்கும் கிடைக்கவில்லை.
இதனிடையே சின்னகாலால்பட்டை சேர்ந்த மீனவர்கள் வலையில் இறந்த நிலையில் பெண் ஒருவர் சிக்கி கிடந்துள்ளார். இது குறித்து பக்ரூதீன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இறந்து கிடந்தது தரகேஸ்வரி என்று தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தரகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
இந்திய ரிசர்வ் படை வீரர் மனைவி புதுச்சேரி தற்கொலை
மேலும்
• சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்
• சென்னையில் விமானி மர்மச் சாவு
• தமிழக இலங்கை அகதிகள் வசதிக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு: கருணாநிதி அறிவிப்பு
• உடுமலையில் ஒரே பள்ளியில் படிக்கும் 5 பேருக்கு பன்றி காய்ச்சல்
• நியாயவிலை கடைகளில் பருப்பு விலை திடீர் உயர்வு
• பா.ஜ.க ஆட்சியில் நடந்த ஊழலை தி.மு.க அமைச்சர்கள் ஏன் எதிர்க்கவில்லை? ஜெயலலிதா கேள்வி