முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > புதுவை: நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
புதுவை: நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி
புதுச்சேரி அருகே தவளக்குப்பம் என்ற இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளைக் கையாண்ட சிலர் கையாண்ட போது, சில வெடிகுண்டுகள் வெடித்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஆல்பர்ட், அந்துவான் எனும் 10 வயது சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே ஒரு பையில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்த போது, அது வெடித்ததாகவும், இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலத்த காயம் அடைந்த அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

அந்தப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் எப்படி வந்தன? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
காமராஜர் பிறந்தநாளைக் கொண்டாட ரூ.1.33 கோடி
3வது நாளாக ப‌யி‌ற்‌‌சி மரு‌த்துவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
4 ச‌ட்டம‌ன்ற இடை‌த்தே‌ர்த‌ல் தே‌தி தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ‌விரை‌வி‌ல் அ‌றி‌வி‌க்கு‌‌ம்: நரேஷ்குப்தா
நடமாடும் இரத்த வங்கி: மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ரோட்டரி மாவட்ட ஆளுநராக ஆனந்த் பொறுப்பேற்றார்
காமராஜ‌ர் ‌பிற‌ந்தநா‌ள் தே‌சிய மாணவ‌ர் ‌தின‌ம்: ‌பிரதமரு‌க்கு சர‌த்குமா‌ர் கடித‌ம்