சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3230-ன் (Rotary International Districty 3230) ஆளுநராக டபிள்யூ. ஆனந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.கடந்த ஜூலை மாதம் முதல் இப்பொறுப்பை ஏற்றுள்ள அவர், மெட்ராஸ் தொழில் நகர ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டிற்கான ரோட்டரி சங்கத்தின் திட்டமாக, `சங்கத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில்' என்ற வாசகம் வெளியிடப்பட்டுள்ளது.அடிப்படையில் கட்டிடக்கலை வல்லுநரான ஆனந்த், தனது பெயரிலான ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை கட்டிடக்கலை வல்லுநராக உள்ளார். உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள 532 ரோட்டரி மாவட்டங்களில் ரோட்டரி இண்டர்நேஷனல் - 3230 குறிப்பிடத்தக்க ஒரு மாவட்டமாகும்.கடந்த ஜூன் மாதம் வரை இந்த ரோட்டரி மாவட்டத்தின் கீழ் சுமார் 106 ரோட்டரி சங்கங்கள் செயல்பட்டன. மொத்தம் 4,500-க்கும் மேற்பட்டோர் இதன் கீழ் உறுப்பினர்களாக உள்ளனர். |